பல்வேறு குற்ற வழக்குகளில் 21 பேர் கைது : 90.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக 21 பேரை கைது செய்த தென் கிழக்கு மண்டல போலீசார் ரூ.90.20 லட்சம் மதிப்புள்ள நகை, ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூரு தென் கிழக்கு மண்டல சரகங்களில் பதிவாகியிருந்த பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக 21 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். நேற்று இந்த பொருட்கள் தென் கிழக்கு மண்டல டி.சி.பி அலுவலகத்தில் உயர் போலீசார் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை டி.சி.பி இஷா பந்த் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது; பெங்களூரு தென் கிழக்கு மண்டல சரகத்திற்குட்பட்ட பரப்பன அக்ரஹாரா, எச்.எஸ்.ஆர் லே அவுட், கோரமங்களா, உள்பட பல்வேறு சரகத்தில் பதிவாகியிருந்த பைக் திருட்டு, நகை திருட்டு, வழிப்பறி கொள்ளை தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையில் இவர்களிடம் இருந்து ரூ.90.20 லட்சம் மதிப்பிலான 440 கிராம் தங்கம், வைரம், 450 கிராம் வெள்ளி, 47 இரு சக்கர வாகனம், 2 நான்கு சக்கர வாகனம், 22 கிலோ 500 கிராம் கஞ்சா, 50 கிராம் எம்.டி.எம் போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதில் அதிகப்படியாக எச்.எஸ்.ஆர் லே அவுட் போலீசார் 5 பேரை கைது செய்து 440 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த 21 பேரின் கைது நடவடிக்கையால், பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே அவுட் சரகத்தில் பதிவாகியிருந்த 9 வழக்குகள், ஆடுகோடியில் 2, கோரமங்களாவில் 30, பரப்பன அக்ரஹாராவில் 10 என 51 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று டி.சி.பி இஷாபந்த் கூறினார்.

Related Stories: