‘அசூர் அக்ரோ டெக் லிமிடெட்’ முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம் போலீசார் அழைப்பு

சென்னை: சேலத்தை தலைமையிடமாக செயல்பட்ட ‘அசூர் அக்ரோ டெக் லிமிடெட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தோர் உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக காவல் துறை பொருளாதார குற்றப்பிரிவு சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.

சேலத்தை  தலைமையிடமாக கொண்டு செல்பட்டு வந்த ‘அசூர் அக்ரோ டெக் லிமிடெட்’ என்ற நிறுவனம் முதலீட்டாளர்களின் வைப்பு நிதிகளை திருப்பி தராமல் கூட்டு சதி ெசய்து முதலீட்டார்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்தால் அந்த  நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் வழக்கு பதிவு ெசய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதிநிறுவனத்தின் இயக்குனரான ராஜேந்திரனை கைது ெசய்துள்ளோம்.எனவே, அசூர் அக்ரோ டெக் லிமிடெட் நிறுவனத்தில் பொதுமக்கள் யாரேனும் முதலீடு செய்து ஏமாந்தோர். விரைவில் சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்களுடன் கிண்டி, திருவிக. தொழிற்பேட்டை, பழைய கார்ப்பரேட் கட்டிடம் பொருளாதார  குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: