சிபிஐ அதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சென்னை கட்டுமான நிறுவன துணை தலைவர் அதிரடி கைது

சென்னை: சிபிஐ உயரதிகாரிக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் செயல்பட்டு வரும் சோமா என்டர்பிரைசஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ் என்பவரே கைது செய்யப்பட்டவர். சிபிஐ வழக்கு ஒன்றில் சோமா என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்காக சிபிஐ டிஐஜி அஸ்ரா கார்கிற்கு ராமச்சந்திர ராவ் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார்.

அஸ்ரா கார்க் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திர ராவை கைது செய்துள்ளனர். முன்னதாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் நீரஜ்குமார் சிங் மற்றும் தினேஷ் ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: