மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.490 கனஅடியும், நீர் இருப்பு 94.254 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 29,900 கனஅடியாக உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 28,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Related Stories: