தெற்கு கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள், பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்: தமிழக எம்.பிக்கள் பங்கேற்பு

சென்னை: தெற்கு ரயில்வே கோட்டங்களில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள், பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தமிழக எம்பிக்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆலோசனை கூட்டத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் (பொறுப்பு) ராகுல் ஜெயின் தலைமை தாங்கினார். கோட்ட மேலாளர் மகேஷ், யு.ஆர். ராவ் (சேலம்) மற்றும் ரயில்வே துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வில்சன், கணேசமூர்த்தி, எஸ்.ஆர்.பார்த்திபன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கவுதம் சிகாமணி, கதிர் ஆனந்த், அண்ணாதுரை, டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், செந்தில்குமார், கணேஷ் செல்வம், காங்கிரஸ் எம்பிக்கள் திருநாவுக்கரசர், செல்லக்குமார்,

விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், பி.ஆர்.நடராஜன், ஏ.கே.செல்வராஜ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், சந்திரசேகரன், முகமது ஜான் மற்றும் சித்தூர், திருப்பதி எம்.பி.க்கள் பலர் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது என்றார். திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறுகையில், ‘‘ரயில்வே தேர்வுகளில் மாநில மொழிகளில் தேர்வு எழுதவும், ரயில்வே பணிகளில் அந்ததந்த மாநில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தோம் என்றார்.

Related Stories: