தமிழகத்தில் 3,750 கோடி முதலீடு துபாய் தொழிலதிபர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 3,750 கோடிக்கு முதலீடு செய்ய, துபாய் தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு துபாய் வந்தார். அவருடன் அமைச்சர்களும் வந்திருந்தனர். தாஜ் ஓட்டலில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ‘பிசினஸ் லீடர் போரம்’  என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் என்எம்சி மருத்துவ குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் செட்டி பி.எஸ்.எம்.ஹபிபுல்லா உள்ளிட்ட ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றனர் இக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் பல்வேறு தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்’’ என அழைப்பு விடுத்தார்.

மேலும், கூட்டத்தின் முடிவில் பல்வேறு தொழிலதிபர்கள் 3,750 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்தனர். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றி மேடையில் அறிவிக்கப்பட்டது. பரிசீலிக்க முடிவு: தினகரன் பத்திரிகையில் வெளிநாடுவாழ் தமிழர் நலன் தொடர்பான கோரிக்கைகள் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இந்த கோரிக்கைகளை தொகுத்து வெளிநாடுவாழ் தமிழர்கள் நிர்வாகிகளாக உள்ள ஈமான் சமூக நல அமைப்பின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனுவாக அளித்தனர். அதை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.

Related Stories: