அல்டப்ரா தீவு

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பவளத்தீவு அல்டப்ரா. இந்தியப் பெருங்கடலில் வீற்றிருக்கும் அல்டப்ரா தீவுக்கூட்டங்களில் 46 தீவுகள் உள்ளன. இதில் பிரசித்திபெற்றது அல்டப்ரா. அதனாலேயே தீவுக்கூட்டத்துக்கும் அந்தப் பெயர். முற்றிலும் பவளப்பாறைகளால் சூழ்ந்திருக்கும் இந்தத் தீவு, வேறு எங்கேயும் காண முடியாத அரிய வகை கடல் உயிரினங்கள், பறவைகளின் புகலிடமாகவும் திகழ்கிறது.

அவ்வளவு சுலபத்தில் இங்கே நுழைய முடியாது என்பதால் மிகக் குறைவான மக்களே அல்டப்ராவுக்கு வருகை புரிகின்றனர். அந்த மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளைத் தங்களின் ஞாபகார்த்தமாக தீவில் விட்டுச்செல்கின்றனர் என்பதுதான் இதில் துயரம்.Tags : Altabra Island , Aldabra,Island,Coral
× RELATED விண்ணில் அசுர வேகத்தில் கடந்து...