உலகம் சுற்றும் தமிழக அமைச்சர்களால் மக்களுக்கு என்ன பலன்?

* முதலீடு குவியப்போகிறதா?

* கல்வியில் மாற்றம் வரப்போகிறதா?

* மற்ற துறைகள் செழிக்கப்போகிறதா?

மீ ன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் - ஜப்பான் l தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் - ரஷ்யா l முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி - அமெரிக்கா l  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - இந்தோனேசியா l செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு - மொரீஷியஸ், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - பின்லாந்து l சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை  அமைச்சர் கே.பி.அன்பழகன் - சிங்கப்பூர் l தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் -  எகிப்து. இப்படி முதல்வரில் ஆரம்பித்து 13 அமைச்சர்கள் உலகம் சுற்றும் அமைச்சர்களாகி விட்டனர். ஜெயலலிதா ஆறு முறை முதல்வராக இருந்தார்; ஒரு முறை கூட வெளிநாடு சென்றதில்லை; ஏன், கடைசியில் சிகிச்சைக்காக கூட போகவில்லை. அவர் இருந்த வரை, தொகுதியுண்டு, கோட்டையுண்டு என்று இருந்தவர்கள் தான்  அமைச்சர்கள்.

தொகுதிக்கு செல்லக்கூட முதல்வர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அப்படி இருந்த அமைச்சர்கள் இப்போது, அதுவும், ஆட்சியின் பதவிக்காலம் முடிய ஒன்றரை ஆண்டே இருக்கும் நிலையில்,  உலகம் சுற்ற வேண்டிய மர்மம் தான்  என்ன? வரிப்பணத்தில் செலவழிக்கப்படும் இந்த பயணங்களால் மக்களுக்கு கிடைக்கப்போகும் பலன் தான் என்ன? அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியுடன் போட்டோ எடுத்துக்கொண்ட ராஜேந்திர பாலாஜி, அமெரிக்கா போல பால்வளத்தை பெருக்கப்போகிறாரா? பல லட்சம் முதலீடுகளை பெருக்கத்தான் பயணம் என்று சொன்னால், உலக முதலீட்டு மாநாடு  தோல்வியா? பின்லாந்தில் பியானோ வாசிக்கும் செங்கோட்டையன், தமிழகத்தில் கல்விப் புரட்சி செய்யப்போகிறாரா? வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எதற்காக இந்தோனேசியா சென்றார் என்றே தெரியவில்லை. வனப்  பாதுகாப்புக்கு ஏதாவது திட்டம் கொண்டு வரப்போகிறாரா? இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று பெயர் பெற்ற தமிழகத்தில் மருத்துவ துறையில் புதிதாக என்ன நவீனத்தை புகுத்தப்போகிறார் விஜய பாஸ்கர்? ஜப்பானிய மீன்வளத்தை  தமிழகத்தில் செயல்படுத்தப்போகிறாரா ஜெயக்குமார்? பொதுமக்கள் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.  இதோ நான்கு கோணங்களில் பரபரப்பு அலசல்:

Related Stories: