தமிழக ஊராட்சி பள்ளிகளில் 144 கோடி செலவில் 250 கி.மீ.க்கு சுற்றுச்சுவர்: நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை: ஊரக ஒன்றிய மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 250 கி.மீ.,க்கு சுற்றுச்சுவர் அமைக்க 144 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.  சட்டசபை கூட்ட தொடரில் ஊரக பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 2019-20ம் நிதியாண்டில் 250 கி.மீ,க்கு சுற்றுச்சுவர் மற்றும் வெள்ளத்தடுப்பு சுவர் 144.50 கோடி மதிப்பில் கட்டி  முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார். மகாத்மா காந்தி ேதசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75 சதவீதம், மாநில  அரசு 25 சதவீதம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பணிகள் நடைபெறுகிறது. மத்திய அரசு சார்பில் 111 கோடியும், மாநில அரசு சார்பில் 33  கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: