காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப தேவைப்படும்பட்சத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் னிவாசபுரம், பட்டினம்பாக்கம் கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்படும். இதை முன்னிட்டு காமராஜர் சாலை,  சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதசாரிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்கள் நடமாட்டத்திற்கு ஏற்ப தேவைப்படும் பட்சத்தில் போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறை படுத்தப்படும்.இன்று பெரும்பாலான விநாயகர் சிலைகள் நகரின் பல பகுதிகளில் இருந்து பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு கொண்டுவரப்படும். எனவே, ஈ.வே.ரா சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை,  நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கத்திட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ் தினகரன் சாலை, ஆகிய  சாலைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மிகுதியாக காணப்படும்.

வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல்  மாற்றுப்பாதையில் செல்லலாம். அடையாரிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை. ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ் ரோடு, ஸ்மித் ரோடு அண்ணாசாலை வழியாக  பாரிமுனை சென்றடையலாம்.

Related Stories: