அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மின்சார வாகன தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பார்வையிட்டார்

சென்னை: முதல்வர் எடப்பாடி நேற்று முன்தினம் (5ம் தேதி) அமெரிக்க நாட்டின், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு சென்று, சுற்றுப்புற சூழல்களை பாதுகாக்கின்ற வகையிலும், காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையிலும், அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பேட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, அமெரிக்க நாட்டின், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்திற்கு முதல்வர் சென்றார்.

அங்கு, மாசில்லா எரிசக்தியை ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும், அதுதொடர்பான தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். ப்ளூம் எனர்ஜி நிறுவனமானது, திட ஆக்சைடு எரிபொருள் செல்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, தமிழக அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகார்கள் உடனிருந்தனர்.

Related Stories: