பூமியின் அதிசயம்

நன்றி குங்குமம் முத்தாரம்

இயற்கை ஏராளமான அதிசயங்களை பூமியில் ஒளித்து வைத்துள்ளது. அவற்றுள் மனிதன் கண்டடைந்தது வெகு சொற்பமே. அப்படி அவன் சமீபத்தில் கண்டுகொண்ட ஓர் அதிசயம் தான் இந்தப் புற்றுகள்.

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 10 அடி நீளமும், 30 அடி அகலமுமுள்ள கரையான் புற்றுகளை ஸால்ஃபோர்டு பல்கலைக்கழக  பூச்சியியல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜே மார்ட்டின் கண்டறிந்து பிரமித்து விட்டார். அழிந்துவரும் தேனீக்களைப் பற்றி ஆராய்ந்து வருகிறார் இவர்.

குப்பைகள் ஒன்று சேர்ந்து சிறுகுன்றாக இருக்கிறதோ என்று ஆராய்ந்ததில் கோடிக் கணக்கான கரையான் புற்றுகள் அந்நிலப்பரப்பில் உள்ளதை அடையாளம் கண்டார். ஏறக்குறைய 88 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்து கிடக்கின்றன இந்தப் புற்றுகள். இது மினசோட்டா, நியூயார்க் போன்ற பெருநகரத்துக்குச் சமமானது. ‘‘இந்த இடத்தை ஒரு நகரம் போல கற்பனை செய்துகொள்ளுங்கள்.

அப்படிச் செய்து பார்த்தால் இது மாதிரியான ஒரு நகரத்தை மனிதனால் ஒருபோதும் உருவாக்க முடியாது...’’ என்று வியக்கிறார் ஸ்டீபன். தற்போது கரையான் புற்று களின் வயதைக் கண்டறிய ஆய்வாளர் ஃபன்ச்சுடன் இணைந்து மார்ட்டின் உழைத்து வருகிறார்.  இங்கு எழும்பியுள்ள அனைத்து கரையான் புற்றுகளும் நேர்த்தியாக காற்று புகும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மாபெரும் கட்டடத்தை பிளான் போட்டு கட்டுவதைப் போல ஒவ்வொரு புற்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புற்றுகளுக்கு இடையிலான இடைவெளியும் பிசகு இல்லாமல் கச்சிதமாக உள்ளது. இதில் சில புற்றுகள் மட்டும் 4 அடி  அல்லது 5 அடி உயரத்தில்  அமைந்துள்ளன. பழைய புற்று களில் கரையான்கள் வசிக்க வில்லை. பருவச்சூழல் மாறுபாடால் காடுகள் அழிய, புற்றுகளை கூகுள் எர்த்தில் அடையாளம் கண்டிருக்கிறார் ஆய்வாளர் ஃபன்ச்.

புற்றுகளின் வயதை கதிர்வீச்சு முறையில் கண்டறிந்தபோது அதன் வயது 3,800 என முடிவுகள் வர ஆச்சரியமாகி யுள்ளனர்.இன்னும் இந்த பூமி என் னென்ன ஆச்சர்யங்களையும் அதிசயங்களையும் ஒளித்து வைத்துள்ளதோ.

Tags : The wonder of the earth
× RELATED விண்ணில் அசுர வேகத்தில் கடந்து...