சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,‘ தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவியல் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த அறிவியல் நகரம் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என தலா  ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த விருதைப் பெற தகுதி உள்ளவர்கள் தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரி மூலமாக 15.9.2019 ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Science Teachers, Award
× RELATED என்ஐடி கல்லூரியில் இணையவழி...