தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. வங்கக்க்லை ஒட்யுள்ள பகுதிகளில் காற்றின் திசைமாறுபாடு மற்றும் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மத்திய மற்றும் தென் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் 5 செ.மீ மழையும், ஓமலூர், செங்கோட்டை, ஒரத்தநாட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் அல்லது மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: