ஆரோக்கிய நீரூற்று

நன்றி குங்குமம் முத்தாரம்

இயற்கையின் அதிசயமும் அறிவியலின் வலிமையும் சங்கமிக்கும் ஓர் இடம் நீல வண்ண ஏரி. ஐஸ்லாந்தின் தென்மேற்கில் வீற்றிருக்கும் இந்த  ஏரியை மனிதப் படைப்புகளில் தலைசிறந்த ஒன்றாக சுற்றுலாப் பயணிகள் கொண்டாடுகின்றனர். ஆம்; செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி இது. புவி  வெப்ப ஆற்றலால் இந்த ஏரியில் இருக்கும் நீரின் வெப்ப நிலை 37 முதல் 39 சென்டி கிரேட் வரை எப்போதுமே இருக்கும். சிலிகா என்ற வேதிப்பொருளைக் கலப்பதுதான் இதன் நீல வண்ணத்துக்குக் காரணம்.

இதில் குளிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்ற  காரணத் தினால் மட்டுமே வருடந்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஐஸ்லாந்தை நோக்கிப் படையெடுக்கின்றனர். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. தவிர, உடல் ஊனமுற்றவர்கள், சக்கர நாற்காலியின் துணையில்லாமல் எங்கேயும் நகர முடியாதவர்கள் குளிப்பதற்குக் கூட இங்கே வசதியிருக்கின்றது. இந்த ஆரோக்கிய நீரூற்று ‘நேஷனல் ஜியோகிராபிக்’கின் 25 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

Tags : Wellness Fountain,Iceland,Blue Lagoon
× RELATED நித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை...