பல்கலை. கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வாழ்க்கை முழுவதும் மாணவர்களாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்: துணைவேந்தர் பிச்சுமணி பேச்சு

நெல்லை: வாழ்க்கை முழுவதும் மாணவர்களாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று நெல்லை பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பிச்சுமணி பேசினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா, வஉசி அரங்கில் நடைபெற்றது. பதிவாளர் சந்தோஷ் பாபு வரவேற்றார். பல்கலை. துணைவேந்தர் பிச்சுமணி  தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து பேசியதாவது: மாணவர்கள் கண்டுபிடிப்பு திறன், பொறுமை மற்றும் செயல் நோக்கத்துடன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பணிபுரியும்  இடத்தில் நேர்மறையான அணுகுமுறை, பயமின்றி, குற்றமின்றி சமூகத்தில் செயல்புரிய வேண்டும், என்றார்.

கோவை, மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவர்கள் படிக்கும்போது எவ்வாறு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. அந்த சுதந்திரத்திற்கு பிறகு பணிபுரியும் பொறுப்புணர்ச்சியுடன் கடுமையாக உழைக்க வேண்டும். கற்றது கை அளவு கல்லாதது உலகளவு என்ற பழமொழிக்கு ஏற்ப நீங்கள் தினமும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும், என்றார்.விழாவில் 1252 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். தேர்வாணையர் சுருளியாண்டி மற்றும் பல்கலை. கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின்  முதல்வர்கள் பங்கேற்றனர். பல்கலை. கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளின்  இயக்குநர் ரவி நன்றி கூறினார்.

Related Stories: