திருச்சி கொண்டையன்பேட்டை பகுதியில் ஒன்று முதல் 9 அடி வரை விநாயகர் சிலைகள் விற்பனை: வாங்குவதில் மக்கள் ஆர்வம்

திருச்சி: திருச்சியில் 1 அடி முதல் 9 அடி வரை தயாராகும் விநாயகர் சிலைகளை சுற்று வட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். திருச்சி கொண்டையன்பேட்டை பகுதிகளில் சிலை செய்பவர்கள் பண்டிகை காலங்களுக்கு தகுந்தவாறு விநாயகர், கிருஷ்ணர், அய்யப்பன், சரஸ்வதி என சிலைகளை வடிவமைத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக வரும் செப்.2ம் தேதி விநாயகர் சதுர்த்தி தற்போது வருவதால் விநாயகர் சிலைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவைகளை திருச்சி அதன் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் அச்சுகள் மூலம் திருஷ்டி பொம்மைகள், தெய்வங்கள் மற்றும் பல்வேறு விதமான கலைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தேய்காய் நார், ஜாக் பவுடர், சுண்ணாம்பு, வாட்டர் கலா் ெகாண்டு தயாாிக்கப்படும் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான தீங்கையும், பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. தற்போது சிலை செய்பவர்களிடம் அதிகமான ஆர்டர்கள் கொடுத்துள்ளதால் இரவு, பகலாக சிலை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்திக்காக ராஜகோலம், நடனம், சிம்மாசனத்தில் அமர்ந்த விநாயகர் என பல்வேறு வடிவத்தில் சிலைகள் அமைத்துள்ளனர். மேலும் அந்த சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. மூலதனப் பொருட்களில் விலை உயா்வுக்கு ஏற்ப சிலை செய்பவார்கள் விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

ஒரு அடி முதல் 9 அடி வரையிலான விநாயகர் சிலைகளை தற்போது தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவை குறைந்தபட்சம் ரூ.350 முதல் ரூ.15 ஆயிரம் வரை விலையில் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.விநாயகர் சிலை செய்பவர்கள் கூறுகையில், பச் சை களிமண் (சுடப்படாதது) அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதத்தால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் ரசாயனம் கலக்காத பொருட்களால் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. தண்ணீரில் கரையக் கூடிய வர்ணங்களை மட்டுமே சிலைகளுக்கு பயன்படுத்துகிறோர். இந்த விதிமுறைகளை விநாயகர் சிலை தயாரிப்பவர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: