நாகர்கோவில் மாநகராட்சியில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு பயிற்சி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் கொசுபுழு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நேற்று உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி புத்தாக்கபயிற்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த புத்தாக்க பயிற்சியில் கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை, ராஜா, தியாகராஜன், ராஜேஷ், மாநகராட்சி டாக்டர்கள் காவேரி, மஞ்சு, மேரிலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 நிகழ்ச்சியில் தலைமை வகித்த மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. நாகர்கோவிலிலும் இருந்தது. தீவிர நடவடிக்கையின் காரணமாக டெங்கு குறைக்கப்பட்டு உள்ளது.

ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடப்பதில் இருந்தும் டெங்கு கொசு பரவ வாய்ப்பு இருக்கிறது.  இதனால் அனைத்து வீடுகளிலும் முறையாக ஆய்வு செய்து தண்ணீரை பாதுகாப்பாக வைக்க வலியுறுத்த வேண்டும். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசுபுழு உற்பத்தியாகும் வகையில் வீடுகளில் காரணிகள் இருந்தால் அபராதம் விதிக்கவேண்டும். மீனாட்சிபுரம் பெரியதெருவில் ஒரு வீட்டிற்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொசுஒழிப்பு பணியாளர்கள் ஒழுங்காக பணியாற்றவேண்டும். அவர்களை கண்காணிக்க அதிகாரிகள் உள்ளனர். மேலும் உங்களை ஜீபிஎஸ் கருவிமூலம் கண்காணித்து வருகிறோம். இதனால் சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: