அஞ்சல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 55 பேருக்கு விருது: தலைமை செயலர் வழங்கினார்

சென்னை: அஞ்சல் துறையில் சென்னை மண்டல அளவில் 208-19ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், சிறப்பாக பணியாற்றிய 55 பேருக்கு தமிழக தலைமை செயலர் சண்முகம் விருது வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:  எனக்கும், அஞ்சல் துறைக்கும் ஒரு தொடர்பு உண்டு. நான் 10ம் வகுப்பு படித்தவுடன் அஞ்சல் துறை பணியில் சேர விண்ணப்பித்தேன். ஆனால், வேலை கிடைக்காத காரணத்தால் மேல் படிப்பு படிக்க சென்றுவிட்டேன். கடித போக்குவரத்திற்கு பதில் இ-மெயில் போக்குவரத்து வந்த பிறகும் அஞ்சல்துறை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இத்துறை தனித்தன்மையுடன் நிலைத்து நிற்கிறது. முதியோர் உதவித்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு தபால் துறை முக்கிய காரணம்.  இவ்வாறு பேசினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும். மாவட்டங்கள் பிரிக்கப்படுவது நிர்வாக வசதிக்காக மட்டுமே. ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சியை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கவே முதல்வர் வெளிநாடு செல்கிறார். இதன்மூலம் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.இவ்வாறு கூறினார்.

Related Stories: