×

வெள்ளை பென்குயின்!

நன்றி குங்குமம்


போலந்தின் பால்டிக் போர்ட்டில் உள்ள ஓர் உயிரியல் பூங்காதான் இப்போது ஹாட் டாக். அங்கே பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த  வெள்ளை பென்குயின் ஒன்று முதல் முறையாக மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. ‘அல்பினோ’ எனும் தோல் நிற குறைபாட்டுடன் கடந்த டிசம்பர் 14ம் தேதி இந்தப் பென்குயின் பிறந்தது. அதனால்தான் அது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது.


இவ்வகையான பென்குயின்கள் அரிதிலும் அரிதானது. “உலகத்திலேயே வெள்ளை நிற பென்குயின் இது மட்டும்தான்...’’ என்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள். சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் இந்த பென்குயின் கொஞ்ச நாட்களுக்குத் தான் உயிரோடு இருக்கும் என்ற தகவல் பலரை நிலைகுலைய வைத்துள்ளது. வெள்ளை பென்குயினைப் பார்வையிடுவதற்காக மட்டுமே ஆயிரக்கணக்கானோர் தினமும் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிகிறார்கள். சிலர் கண்ணீர் மல்க பென்குயினுக்காகப் பிரார்த்திப்பது நெகிழ்ச்சி.

Tags : Hot Dog is now a zoo in the Baltic Port of Poland. There, for the first time, the white penguin, which has been safely preserved, came to public view.
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்