ஆபத்தைக் கண்டால் சுருட்டிக்கொள்ளும் மரவட்டைகள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

மழைக்காலம் என்றாலே எங்கு பார்த்தாலும் ஓடிக்கொண்டிருப்பவை மரவட்டைகள். மரவட்டை (Millipedes) என்பவை கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த உயிரினமாகும். இவை உடலில் துண்டத்துக்கு இரு சோடி கால்கள் என கொண்டிருப்பவை. பெரும்பாலான மரவட்டைகள் 20க்கும் மேற்பட்ட துண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக்கொண்டவை. இருப்பினும் சில மரவட்டைகள் முதுகு-வயிற்றுப்புறமாகத் தட்டையானவையாகவும், நீளத்தில் மிகவும் குறுகியவையாகவும் இருக்கும்.

மரவட்டையின் உடல் மென்மையானது. உடலைச் சுற்றி மென்மையான ஓட்டால் மூடப்பட்டிருக்கும். ஆனாலும் இது பாதுகாப்பு என்று சொல்ல முடியாது. ஆபத்து ஏற்படும்போது மரவட்டைகளால் வேகமாக ஓடித் தப்பிச் செல்ல முடியாது. அதனால் உணர்வு செல்கள் மூலம் ஆபத்தை உணர்ந்ததும் உடலை வட்டமாகச் சுருட்டிக்கொள்கிறது. அதன் பிறகு எளிதில் மரவட்டைக்குத் தீங்கு இழைத்துவிட முடியாது. இது இயற்கை வழங்கிய தகவமைப்பு. அப்புறம் மரவட்டைகளுக்கு ஆயிரங்கால் பூச்சி என்று பெயர் இருந்தாலும் அவற்றுக்கு ஆயிரம் கால்கள் கிடையாது என்பதே உண்மை.

Related Stories: