அரசு உப்பளத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், வாலிநோக்கத்தில் மாரியூர்  - வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. 1974ல் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் உப்பு தயாரிக்கப்படுகிறது. இங்கு சுமார் 2,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதனால்  2017 ஏப்ரல் மாதத்தில் வாலிநோக்கத்தில் 5 கோடியே 65 லட்சம்  மதிப்பீட்டில் இயந்திரங்கள்,  2 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா தொண்டு நிறுவனம் இணைந்து புதிய உற்பத்தி அலகு திறக்கப்பட்டது. மேலும் இரட்டை சுழற்சி செய்யும் இயந்திரம் 75 லட்சத்திற்கு அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கும் உப்பிற்கு நல்ல வரவேற்பும் இருந்தும், வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பதாலும் அரசிற்கு மாதம் ஒன்றிற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

உப்பள தொழிலாளர்கள் (சிஐடியு) சங்க தலைவர் பச்சமாள் கூறுகையில், ‘‘கடந்த 2014ம் ஆண்டு அரசு ஒப்பந்தப்படி, உப்பள தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் இரண்டு தவணை தொகை வழங்கப்படவில்லை. மாதசம்பளத்தை கடைசி வாரத்தில் வழங்கப்படுவதால் தொழிலாளர்கள் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு, கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலை உள்ளது உப்பளத்தில் தயாரான உப்பு குவியலை பாதுகாக்க மழைக்கால  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், டன் கணக்கில் விளைவிக்கப்பட்ட உப்புகள் மழைக்கு கரைந்து வீணாகி விட்டது. இதனால் அரசிற்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Salt Production , Government Salt
× RELATED பிப்-23: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32