காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்: அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு

கத்துவா: காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் உஜ் நதியில் மேல் பகுதியில் கட்டப்பட்ட ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட பாலத்தை ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறினார். தான் முன்பு உள்துறை அமைச்சராக இருந்த போது காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண முயன்றதை நினைவு கூர்ந்தார்.

Advertising
Advertising

ஹூரியத் தலைவர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகளை சந்திக்க மறுத்து விட்டதை அவர் சுட்டிக்காட்டி பேசினார். காஷ்மீர் விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும் என்றும், உலகில் எந்த சக்தியாலும் அதனை தடுத்து நிறுத்த முடியாது என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். என்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை அறிய பிரிவினைவாத தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் தான் ஒருங்கிணைந்து தீர்வு காண முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை, பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதற்கு, அவ்வப்போது இந்திய ராணுவமும், தகுந்த பதிலடி கொடுத்து விரட்டியடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories: