10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது அரசுத்தேர்வுகள் இயக்ககம்

சென்னை: 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுதேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்புக்கு மார்ச் 17 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அதன் தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி  வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. 12ம் வகுப்புக்கு மார்ச் 2 முதல் மார்ச் 24 வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 11ம் வகுப்புக்கு மார்ச் 4 முதல் மார்ச் 26ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கிய நாளன்றே அடுத்த பொதுத்தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதம் கால தாமதமாக பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பாடத்திட்டங்களும் நடத்தி முடிக்க வேண்டுகம் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:

10ம் வகுப்பு தேர்வு: (மார்ச் 17 - ஏப்ரல் 9)

alignment=

மார்ச் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் மொழி பாடங்களும், அதன்பிறகு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளும் நடைபெறுகிறது.

11ம் வகுப்பு தேர்வு: (மார்ச் 4 - மார்ச் 26)

alignment=

11ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது.

12ம் வகுப்பு தேர்வு: (மார்ச் 2 - மார்ச் 24)

alignment=

2, 5 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வும், அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: