முன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலை மூடல் : வேதாந்தா புகார்

சென்னை : மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றிய போதும் முன்னறிவிப்பின்றி ஆலையை மூட உத்தரவிட்டதாக வேதாந்தா புகார் அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் வேதாந்தா தரப்பு வாதாடினார்.  ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சுழலுக்கு மிககுறைவான பாதிப்பே ஏற்பட்டதாக என்று கூறி  வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு தீயணைப்பு மற்றும் சுற்றுச்ச்சுழல் துறையின் அனுமதி உள்ளதா? என்ற நீதிபதி கேள்விக்கு வழக்கறிஞர் பதிலளித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவனி சுப்பராயன் அமர்வு முன்னிலையில் 6-வது நாளாக ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை நடைபெற்றது.   

Related Stories: