மாநில அரசு அனுமதியின்றி மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை: சி.வி.சண்முகம்

சென்னை: மாநில அரசு அனுமதியின்றி மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடமுண்டு என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவில்லை, கொள்கை முடிவு எடுக்கவில்லை என்றெல்லாம் திமுக தரப்பில் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்து வந்த நிலையில் தற்போது மிக முக்கியமான ஒரு கருத்தை சி.வி.சண்முகம் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடர்ச்சியாக மாநில அரசு அனுமதியில்லாமல் மத்திய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்த முன்வந்தால் நிச்சயமாக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும் அந்த சட்டத்தில் இடம்முள்ளதாகவும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சி.வி.சண்முகம் பதிலளித்துள்ளார். மேலும் இதுவொரு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே இதற்கு முன்னதாக பேசிய  சி.வி.சண்முகம் மாநில அரசு அனுமதி என்பது தற்போது வரை இந்த திட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை எனவும், மாநிலத்தின் நிலப்பரப்பு ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசின் அனுமதியை மத்திய அரசு கண்டிப்பாக பெற்றாக வேண்டும். அவ்வாறு பெறவில்லை எனில் நிச்சயமாக அந்த திட்டம் என்பது அனுமதிக்கப்பட மாட்டாது என்ற ஒரு விஷயத்தை சி.வி.சண்முகம் தெரிவித்த நிலையில் தொடர்ச்சியாக அவர் பேசும் பொழுது மாநில அரசு அனுமதியின்றி மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கண்டிப்பாக கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிகவும் தெளிவாக அவர் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பதிலளித்தார்.

Related Stories: