தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு 3 பேரை காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு

கோவை: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நேற்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கோவை உக்கடம் அன்பு நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (27), வின்சென்ட் ரோட்டை சேர்ந்தவர் முகமது உசேன் (30), கரும்புக்கடையை சேர்ந்தவர் சேக் ஷபியுல்லா (27). இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக கடந்த 12ம் தேதி கோவை போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் படி (உபா) நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டு ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியுடன் ஷாஜகான் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது சிலருடன் ரகசிய ஆட்சேபகரமான நடவடிக்கை குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது. சிறையில் உள்ள 3 பேரையும் 8 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு போத்தனூர் போலீசார் கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு அனுமதி கிடைத்ததும், 3 பேரிடமும் தீவிரவாத கும்பல், அமைப்புகள் குறித்து விசாரணை நடத்தி ஆதாரங்கள் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: