பிளாஸ்டிக் குப்பையை தவிர்க்க பால் கவர்களை திரும்ப பெற ஆவின் திட்டம்

சென்னை: ஆவின் நிறுவனம் பால் கவர்கள் குப்பையில் வீசப்படுவதை தடுக்க ஒரு கவரை 10 பைசா என்ற விலையில் திரும்ப பெற்று மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆவின் நிறுவனம் தனது விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு பால், பாதாம் பால் உள்ளிட்டவற்றை எவர் சில்வர் டம்ளர்களில் வழங்க உள்ளது. அதே போல், ஆவின் பால் அடைக்கப்பட்டு விற்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள் குப்பையில் வீசப்படுவதை தடுக்க, அவற்றை திரும்ப பெற்று மறுசுழற்சி செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு ஆவின் பால் கவருக்கு 10 பைசா என்ற விலையில், வாங்கிக்கொள்ள ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு கிலோ என்ற அளவில் பால் கவர்கள் வாங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கவர்களை திரும்பெறும் மையங்களை தேர்வு செய்யம் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் கூறியதாவது: குப்பையில் தூக்கி விசப்படும் ஆவின் பால் கவர்களை திரும்பப் பெற்று, மறுசுழற்சி செய்ய முடிவு செய்துள்ளோம். இது கூடுதல் சுமையாக இருந்தாலும் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும். அதே போல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு முயற்சிகளை கையாள உள்ளோம். பால் சப்ளை செய்யும் ஊழியர்கள், பால் கவர்களை திரும்ப வாங்கிக் கொடுத்தால், அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்க உள்ளோம். இவ்வாறு ஆவின் நிர்வாக இயக்குனர் காமராஜ் கூறினார்.

Related Stories: