நாளை கணினி ஆசிரியர்கள் தேர்வு

சென்னை,: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் (கிரேடு1) முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு நாளை 121 மையங்களில்  நடக்கிறது. இதில் 30 ஆயிரம் பேர் கணினி மூலம் தேர்வு எழுதுகின்றனர்.  அரசுப் பள்ளிகளில் 2018-2019ம் ஆண்டில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர்(கிரேடு1) பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர்களை  நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 1ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு நாளை தமிழகம் முழுவதும் நடக்கிறது. இந்த தேர்வு எழுத 30 ஆயிரத்து 831 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  அவர்களில் 7545 பேர் ஆண்கள், 23 ஆயிரத்து 286 பேர் பெண்கள். மாற்றுத் திறனாளிகள்் 322 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான ஹால்டிக்கெட்டுகள் கடந்த வாரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 121 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 தேர்வு மையம் அமைக்கப்பட்டு அதில் 479 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுத உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் சில விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,  

*  மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத வரும் போது, மாற்றுத் திறனாளிக்கான சான்றும் உடன் எடுத்து வர வேண்டும்.  

* தேர்தல் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான்கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை(அசல்) எடுத்து வர வேண்டும்.

*  ஹால்டிக்கெட்டுகள் தேர்வு மையத்தில் கொடுத்துவிட வேண்டும். அதனால் வேறு நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Related Stories: