சமூக ஆர்வலர் மேதாபட்கர் பரபரப்பு பேட்டி: தொழிலாளர்களுக்கு எதிராக பாஜ அரசு கொண்டு வரும் திட்டம்

சென்னை: சமூக ஆர்வலர் மேதாபட்கர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று கூறிவிட்டு உடனடியாக ஏழை மக்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை அகற்றி விடுகின்றனர். அவர்களுக்கு உரிய மாற்று இடம் கூட முறைப்படி ஏற்பாடு செய்யாமல் காலம் தாழ்த்துகின்றனர்.  ஆனால், உண்மையிலேயே நீர் நிலைகளை ஆக்கிரமித்து வானளாவிய அளவு உயரத்திற்கு கட்டப்படும் பெரும் நிறுவனங்களின் கட்டிடங்களையோ, பங்களா வீடுகளையோ, நட்சத்திர அந்தஸ்துள்ள உணவு விடுதிகளையோ அகற்றுவதில் ஆர்வம் காட்டாமல் பின் வாங்குகின்றனர். அது ஏன் என்று தெரியவில்லை.

அதேபோல் பூமிக்கு அடியில் இருக்கும் மீதேன், ைஹட்ரோ கார்பன் போன்றவைகளை எடுக்கும் திட்டங்கள் மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். தற்போதைய மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட வரைமுறைகளை புதிதாக கொண்டு வர திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறது. இந்த சட்ட வரைமுறைகள் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டால் நமது நாட்டில் தொழிலாளர்கள் நலன், உரிமைகள் அனைத்தும் முழுமையாக பாதிக்கப்படும். எனவே மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு மாநில அரசுகளும், அனைத்து தரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து அந்த வரைமுறையை கைவிட கோரி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: