பேருந்து தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்கள் இடைநீக்கம்: கல்லூரி முதல்வர் அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கலைக்கல்லூரிகள் கடந்த 17ம் தேதி திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே ரூட் பிரச்னை இருப்பதால் வன்முறை சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்ட்ரல், அண்ணாசதுக்கம், கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, நந்தனம் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், போலீசாரின் தடையை மீறி பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது படித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்’ மாணவர்கள் அமைந்தகரை மர்க்கெட் புல்லா அவென்யூ அருகே வந்த மாநகர பேருந்தை வழிமறித்து சிறைபிடித்து மேற்கூரையில் ஏறி ஆட்டம் பாட்டத்துடன் ேபருந்து தினம் கொண்டாடினர்.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை பார்த்த மாணவர்கள் பேருந்தில் இருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய மாணவர்களை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பிடித்தனர். இதன்பிறகு பிடிபட்ட 20 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  இந்த மாணவர்கள் தொடர்பான விவரங்களை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி 9 மாணவர்களை இடைநீக்கம் செய்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழிசெல்வன் உத்தரவிட்டுள்ளார்.

 பிரகாஷ் (3ம் ஆண்டு வரலாறு ), நரேந்திரதிரன் ( 3ம் ஆண்டு பொருளாதாரம் ), மணிகண்டன் (3ம் ஆண்டு பொருளாதாரம் ) , ராகேஷ் ( 3ம் ஆண்டு வணிகவியல் ), சுந்தரேசன் (2ம் ஆண்டு தத்துவம்), மணிகண்டன் (3ம் ஆண்டு பொருளாதாரம் ), பரணிதரன் (2ம் ஆண்டு வணிகவியல் ), விக்னேஷ் (2ம் ஆண்டு கார்ப்பரேட் செக்கரட்டிசிப்), மகேஷ் (2ம் ஆண்டு வரலாறு ) ஆகிய 9 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முதல்வரின் அனுமதி இல்லாமல் இவர்கள் யாரும் கல்லூரிக்குள் நுழையக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: