குடிநீர் பிரச்னையை சமாளிக்க புது திட்டம் நதிகளே இல்லாத இஸ்ரேலை பின்பற்றவேண்டும்: ஐடியாக்களை அள்ளிவிடும் தமிழிசை

சென்னை: பட்டிமன்ற பேச்சு மட்டுமல்ல ஐடியாக்களையும் அள்ளி வீசுகிறார் பாஜ தலைவர் தமிழிசை. தற்போது தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் தமிழகம் திணறி வருகிறது. அதற்கு உடனடி தீர்வு சொல்லாமல் இஸ்ரேல் நாட்டை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி அசரடித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை நேற்று காலை 8.30 மணி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பிரச்னை நிலவி வருகிறது. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச் னை. போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்ரேல் நாட்டில் நதிகளே கிடையாது. ஆனாலும் அங்கு தண்ணீர் பிரச்னையை அந்நாட்டு அரசு சிறப்பாக சமாளித்து வருகிறது. எனவே, நமது தமிழக அமைச்சர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு சென்று அங்கு எப்படி தண்ணீர் பிரச்னையை தீர்க்கிறார்கள் என்று நேரடியாக பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். இஸ்ரேல் நாட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளது. நடமாடும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் இஸ்ரேல் நாட்டைப்போல் நடமாடும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நடைமுறைப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: