கொங்கணாபுரம் சந்தையில் ₹3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இடைப்பாடி : கொங்கணாபுரம் வாரச்சந்தையில் நேற்று ₹3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.  இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் வாரச்சந்தையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 7500 ஆடுகள், 900 பந்தய சேவல், 1100 நாட்டுக்கோழி மற்றும் சேவல் மற்றும் 92 டன் காய்கறி, மற்றும் 13 டன் பலாப்பழம் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 10 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ₹4,400 முதல் ₹5,550 வரையும், 20 கிலோ எடையுள்ள ஆடு ₹8600 முதல் ₹11 ஆயிரம் வரையும் விற்பனையானது. பந்தய சேவல் ₹800 முதல் ₹3,000 வரையும், நாட்டுக்கோழி ₹100 முதல் ₹550 வரையும், சேவல் ₹150 முதல் ₹900 வரையும் விற்பனையானது.

மேலும், 27 கிலோ எடைகொண்ட ஒரு பெட்டி தக்காளி ₹400 முதல் ₹700 வரையும், பலாப்பழம் ஒன்று ₹50 முதல் ₹250 வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ₹3 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகவும், பண்டிகைகள் காரணமாக ஆடுகளின் தேவை அதிகரித்தால் கடந்த வாரத்தை விட ஆடுகளின் விலை ₹400 வரை உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: