தரங்கம்பாடி அருகே பைக்-ஆம்னி பஸ் மோதல் மாணவர் உட்பட 3 பேர் பலி

தரங்கம்பாடி: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் இன்ஜினியரிங் மாணவர் உட்பட 3 பேர் பலியாகினர்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஆணைக்கோயில் செட்டி தெருவை சேர்ந்தவர்கள் ஆதித்தியன் (22). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதேதெருவை சேர்ந்தவர்கள் மாரிமுத்து (19, பொறியியல் கல்லூரி மாணவர்),  ஆதிஷ் (18, எலக்ட்ரீசியன்). மூவரும் பைக்கில் நேற்று மதியம் காரைக்கால் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒழுகைமங்கலம் அருகே வந்தபோது, சீர்காழியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஆம்னி பஸ் பைக்  மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் வந்த 3 பேரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையார் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து  டிரைவர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: