மேற்கு வங்காளத்தில் 2 பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் டாக்டர்கள் நாளை வேலை நிறுத்தம்

சென்னை: மேற்கு வங்காளத்தில் 2 பயிற்சி டாக்டர்கள் கொடுரமாக தாக்கப்பட்டு உள்ளதை கண்டித்து தமிழகத்தில் நாளை டாக்டர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ந்தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

இந்த சம்பவம் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா முழுவதும் கேள்விக்குள்ளாக்கப் பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து, வருகிற 17 ஆம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் 18 ஆம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு, தமிழகம் முழுவதும் மருத்துவ சேவைகள் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ சங்க (தமிழ்நாடு) மாநிலத்தலைவர் சு.கனகசபாபதி அறிவித்துள்ளார்.

மேலும் அவர், 24 மணி நேர வேலை நிறுத்தம் அறிவித்திருந்தாலும் மக்கள் நலன் கருதி, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் (emergency) மட்டும் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப்போல திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களிலும் டாக்டர்களின் போராட்டம் மருத்துவ பணிகளை பாதித்தது.

Related Stories: