பீனிக்ஸ் மாலில் கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: திறந்து வைத்தார் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்

சென்னை: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை பீனிக்ஸ் மாலில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. சென்னை பீனிக்ஸ் மாலில் வைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டையை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் திறந்து வைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு, சுமார் 6 புள்ளி 6 டன் எடையுடன், 51அடி உயரத்தில் கிளாஸிக் மால் டெவலப்மென்ட் கம்பெனி, கிரிக்கெட் மட்டை ஒன்றை வடிவமைத்துள்ளது. தற்போது பீனிக்ஸ் மாலில் வைக்கப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் மட்டை, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான விருது நேற்று வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கலந்து கொண்டு விருதினை வழங்கினார். இத்தகைய பதிவு உருவாக்கப்படுவதைக் கண்டு அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்

தொடர்ந்து கிரிக்கெட் மட்டையை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்த கபில்தேவ், அதில் தனது கையெழுத்தையும் பதிவுசெய்தார். அப்போது பேசிய அவர், நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியில்  பாகிஸ்தானை விட இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதாக தெரிவித்தார். மேலும் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பற்றியும் பெருமையாக பேசினார்.

Related Stories: