6,491 குரூப் 4 பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III, வரித்தண்டலர் நிலை- I, வரைவாளர் மற்றும் நில அளவர் என மொத்தம்  6,491 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக குரூப் 4 தேர்வு எழுதுவதற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிகளுக்கு, கூடுதலாக தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில்நுட்பக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பதவிகளுக்கும் ஒரே விண்ணப்பம் மட்டுமே  சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு எழுதுவோருக்கான குறைந்தபட்ச வயது 18. ஜூலை 14ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.செட்பம்பர் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்கள், தாலுகா அலுவலங்கள் உள்ள ஊர்கள் என 301 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ெவளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிந்துகொள்ளலாம்.

இதற்காக நிரந்தரப் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணங்களை இன்டர்நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம். மாற்றுமுறையை தேர்வு செய்பவர்கள் எஸ்பிஐ, எச்டிஎப்சி கிளைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி சில நாட்களில் சமர்ப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை 1800-425-1002  044-25332855, 044-25332833 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Related Stories: