இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை: பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்.... பக்தர்கள் குவிய தொடங்கினர்

செங்கோட்டை: பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் இன்று காலை 4ம்கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நாளை(வெள்ளி) காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்கள், திருமலை  குமாரசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தை பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் வருகிற 14ம் தேதி (வெள்ளி) காலை 9.20 மணிக்கு தொடங்கி 10.20மணிக்கு நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 9ம்தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 10ம்தேதி காலை லட்சுமி ஹோமம் தனலட்சுமி பூஜை, மாலையில்  அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தன.

தொடர்ந்து 11ம்தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜையும், நேற்று 12ம் தேதி (புதன்) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தன. தொடர்ந்து இன்று 13ம் தேதி காலை 8 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜை நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர். மாலை 5 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடக்கிறது.  நாளை 14ம் தேதி (வெள்ளி) அதிகாலை 4.30க்கு ஆறாம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 9.20 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்கள், திருமலை குமாரசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

மதியம் 2 மணிக்கு மகா அபிஷேகம் இடம் பெறுகிறது. மாலை 5 மணிக்கு தங்க தேர் உலா வரும் வைபவமும், இரவு 9 மணிக்கு பண்பொழி நகரீஸ்வரமுடையார் திருக்கோயிலில் சண்முகர், வள்ளி,தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையாளர் அருணாசலம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: