பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க தடை

சென்னை: அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய செல்லும் உதவி பொறியாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் உத்தரவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு மூலம் அணை, ஏரிகள், புனரமைத்தல், புதிதாக அணைகட்டுகள் கட்டுதல், கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியளர் ஜெயராமன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் நீர்வளப்பிரிவு திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர் செல்வராஜூ, நீர்வளப்பிரிவு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார தலைமை பொறியாளர் தனபால், அணைகள் பராமரிப்பு மற்றும் இயக்கக தலைமை பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து வட்ட கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தற்ேபாது நடந்து வரும் ஏரி, அணைகள் புனரமைப்பு பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். ெதாடர்ந்து அப்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பொறியாளர்கள் மத்தியில் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ஜெயராமன் பேசும் போது, திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளில் உதவி பொறியாளர்கள் தினமும் ஆய்வுக்கு செல்ல வேண்டும். அந்த உதவி பொறியாளர்களை மற்ற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது.

கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் அலுவலக பணியில் உள்ளவர்களை அனுப்பி வைக்க வேண்டும். கோட்ட செயற்பொறியாளர்கள் ஒவ்வொரு மாதமும் திட்ட பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், கண்காணிப்பு பொறியாளர்கள் ஒப்பந்ததாரரை அழைத்து ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து அவர்களின் கருத்தை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு பிரச்சனை இருந்தால் அதை உடனடியாக தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு முறையும் கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் பொதுப்பணித்துறை தலைமைக்கு ஆய்வுக்கு தனியாக தான் வர வேண்டும். உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர்களை அழைத்து வரக்கூடாது. அலுவலக பணிகளில் உதவி பொறியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக அவர்களை திட்ட பணிகள் நடைபெறும் இடத்துக்கு அனுப்ப வேண்டும். திட்ட பணி நடைபெறும் பகுதிளில் பொறியாளர்கள் காலி பணியிடங்கள் இருந்தால், அதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். அந்த இடத்தில் பொறியாளர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். திட்ட பணிகளில் காலதாமதம் இல்லாமல், குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: