தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் 96வது பொதுக்குழு கூட்டம் வடபழனியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் அடுத்த தலைவரை நியமிக்க வடபழனியில் உள்ள கமலா திரையரங்குகளில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜாவை தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் கொடுத்தனர்.

 கடந்த 3 முறையாக தலைவர் பொறுப்பில் இருந்த விக்ரமனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் தற்போது பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நடிகர் சங்க தேர்தலில் தனது சிஷ்யன் பாக்யராஜ் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்திருக்கிறார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தலைவராவதற்கான முழு தகுதியும் பாக்யராஜிக்கு உள்ளதாகவும் அவர் கூறினார். 

Related Stories: