மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய குழு ஆய்வு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஜப்பானிய நிதிக்குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது. சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய நிதிக்குழுவும் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். எய்ம்ஸ் அமைப்பதற்காக இடம் வழங்கப்படவில்லை என செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழகத்தில் 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் 2018ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி மதுரை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் 17ம் தேதி ஒப்புதல் வழங்கியது. 2019 ஜனவரி 27ம் தேதி பிரதமர் மோடி நேரடியாக மதுரை வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாக தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இதுவரை நிலத்தை ஒப்படைக்கவில்லை என்ற உண்மை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி மூலம் தெரியவந்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி வழங்க ஒப்புதலாகி உள்ளது என்றும் பணியில் எந்தத் தொய்வும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய நிதிக்குழுவும் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். எய்ம்ஸ் அமைப்பதற்காக இடம் வழங்கப்படவில்லை என செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: