திருமங்கலத்தில் பலத்த மழை தரை பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் மேல்கோட்டை தரைபாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மழை கொட்டிதீர்த்தது. நேற்று காலைவரையிலான 24 மணி நேரத்தில் திருமங்கலத்தில் மழையளவு திருமங்கலத்தில் 40.2 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. சுற்றியுள்ள கண்மாய்களில் மழையால் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை ரயில்வே தரைபாலத்தில் மழைநீர் சூழந்ததால் திருமங்கலம் காரியாபட்டி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த தரைபாலத்தில் இரண்டு டூவீலர்கள் சிக்கிக்கொண்டது. அதில் வந்தவர்கள் கீழே குதித்து தப்பினர். இரண்டு டூவீலர்கள் மட்டும் நடுபாலத்தில் மாட்டிகொண்டது. அதனை கிராம பொதுமக்கள் நேற்று மீட்டனர். பாலம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நேற்று காலை முதல் மதியம் வரையில் மாற்றுபாதையான சாஸ்திரிபுரம் ரயில்வே கேட் வழியாக திருப்பி விடப்பட்டது. நேற்று மதியம் வரையில் தரைபாலத்தில் தேங்கிய தண்ணீரினை மேல்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் மோட்டார் வைத்து வெளியேற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. பலத்த மழையால் கோடை விவசாயம் செய்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Related Stories: