நீர்நிலையை ஆய்வு செய்ய வரமறுத்த விஏஓ... வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த எம்.எல்.ஏ.

மன்னார்குடி: மன்னார்குடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார். அப்போது, பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்தார்.கிராம நிர்வாக அலுவலர் ஆலோசனைக்கு வரமால், வேறு பணி இருப்பதாக சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று வெற்றிலை, பாக்கு அடங்கிய  தாம்பூல தட்டு வைத்து, ஆய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த விஏஓ உடனடியாக பார்வையிட வருவதாக தெரிவித்தார். இனிமேலும் அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

Related Stories: