நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த பலனில்லை : மேற்குவங்க முதல்வர் மம்தா பிரதமருக்கு கடிதம்

கொல்கத்தா : டெல்லியில் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க  முதல்வர் மம்தா கடிதம் அனுப்பியுள்ளார். மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்கும் அதிகாரங்கள் நிதி ஆயோக் அமைப்புக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கூறியுள்ளார்.

Related Stories: