மேகதாதுவில் அணைகட்ட திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி: ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை: தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன்  வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் காவிரி தண்ணீரை நம்பி 12 மாவட்டங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என விவசாயம் நடந்து வந்தது. அது 1991லிருந்து குறுவை சம்பா சாகுபடி என இருபோக சாகுபடியாக மாறியது. பின் 2011க்கு பிறகு சம்பா சாகுபடி மட்டுமே என மாறியுள்ளது. 30 லட்சம் ஏக்கர் காவிரிப்பாசன விவசாயம் இப்போது 12 லட்சம் ஏக்கர் மட்டுமே நடந்து வருகின்ற சூழ்நிலையில் கர்நாடகா தமிழகத்திற்கு காவிரி நீர் தராமல், 3 ஆயிரம் புதிய ஏரிகளை வெட்டி காவிரி தண்ணீரை சேமித்து வைத்தும் வாய்க்கால்களில் தடுப்பணைகளை கட்டியும் தனது விவசாய நிலப்பரப்பை 8 லட்சத்திலிருந்து 22 லட்சமாக உயர்த்தியுள்ளது.

இது மாநில அரசு விவசாயிகள் வாழ்வாதாரத்தில் காட்டுகிற அக்கறையாகும்.தமிழக விவசாயிகளை காவிரி தண்ணீருக்காக அல்லல்பட வைக்கிறது. மேலும் காவிரி நீர் பங்கீடு கிடைப்பதில் சரியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் திணறுகிறது. கர்நாடகா மத்திய அரசை மிரட்டி காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட மதிக்காமல் காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் கனகாபுரம் தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் ரூ5,912 கோடியில் 66 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க கூடிய பெரிய அணையை கட்ட சில நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கண்டிக்கதக்கது.

Related Stories: