சென்னை: இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என இசைஞானி இளையராஜா அறிவித்திருக்கிறார். இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த, இளையராஜாவுக்கு, திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.