தனியார் பாலை தொடர்ந்து ஆவின் பாலின் விலையும் உயர்கிறது, விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை : தனியார் பாலை தொடர்ந்து ஆவின் பாலின் விலையும்  உயர்கிறது, விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி கொள்முதல் விலையை கூட்ட உள்ளதாக அவர் கூறியுள்ளார். பொது மக்களை பாதிக்காத வகையில் விற்பனை விலையை உயர்த்தவும் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது,. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஆவின் பால்விலையை உயர்த்த அரசு திட்டமிட்டு இருந்தது. தீவின விலை பல மடங்கு உயர்ந்து விட்டதே இதற்கு காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே தமிழக மக்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி குடும்பத்தினர் நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரசுக்கு வாக்களித்ததாகவும் மோடிக்கும் அதிமுகவுக்கும் தமிழகத்தில் எதிர்ப்பு இல்லை என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும் மத்திய அரசிடம் பதவி கேட்கவில்லை என்றும் தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: