உலக பால் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: உலக பால் தினத்தை முன்னிட்டு, ஆவின் பால் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பால் ஒரு உலகளாவிய உணவு என்பதை குறிக்கும் வகையில் ஜூன் 1ம் தேதி உலக பால் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக பால் தினத்தை கொண்டாடுவதில் ஆவின் நிர்வாகம்  பெருமிதம் அடைகிறது. இந்த உலக பால் தினத்தன்று  ஆவின் நிறுவனம் விவசாயிகள், வாடிக்கையாளர்கள், விற்பனை முகவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் ஆவின் ஊழியர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளையும்  நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.மேலும் உலக பால் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும்  வகையில் ஆவின் நிறுவனம் இன்று பால் பொருட்களுக்கு  இணையத்தின் பாலகங்களில் மட்டும் 5 சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்  என்று அறிவித்துள்ளது.

Related Stories: