சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டே நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்தாண்டில் இளங்கலை மருத்துவ படிப்பில் 3,350 இடங்களும், முதுகலை படிப்பில் 508 இடங்களும் கூடுதலாக கிடைக்க உள்ளது என்றும் அவர் கூறினார். எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் தேர்வு தேர்வு மதிப்பெண்கள் கட்டாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: