கொசு, பூச்சிகள் வருவதை தடுக்க அரசு அலுவலக கட்டிடத்தில் வலையுடன் கூடிய ஜன்னல்: முதன்மை தலைமை பொறியாளர் சுற்றறிக்கை

சென்னை: ெகாசு போன்ற பூச்சிகள் வருவதை தடுக்க அரசு அலுவலகம் மற்றும் பள்ளி கட்டிடங்களில் வலையுடன் கூடிய ஜன்னல் அமைக்க வேண்டும் என்று கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல  தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக முதன்மை தலைமை பொறியாளர் ரபீந்தர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘அரசு அலுவலக கட்டிடங்களில் ஜன்னல் கதவுகள் அமைக்கும் போது, ஃபரேம், ஷட்டர்,  கிரில் கம்பி சேர்த்து இருப்பது போன்று அமைக்க வேண்டும். யாரும் கட்டிடங்களுக்குள் நுழையாதவாறு ஜன்னல்கள் அமைக்க வேண்டும்.

அந்த ஜன்னல் கதவுகள் உடையாத கண்ணாடியை கொண்டு அமைக்க வேண்டும். அதே போன்று கொசு போன்ற பூச்சிகள் உள்ளே வராத வகையில் வலை ஒன்றை ஜன்னலில் சேர்த்து அமைக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.  இதைதொடர்ந்து ஏற்கனவே அரசு அலுவலகங்களில் உள்ள ஜன்னல்களை மாற்றி கொசுவலையுடன் கூடிய ஜன்னல் அமைக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: